தன்னிகரற்ற தமிழன்
உலகின் மூத்த குடி தமிழ்க்குடி. தமிழனுக்கு என்று தனி அடையாளம் உலக அளவில் உண்டு. வாழ்வியல், காதல், வீரம், பாசம், நேசம் என அனைத்து அவசியத்தை உலகுக்கு உணர்த்தியவன் தமிழன்.
உலகின் ஒப்பற்ற மொழியான தமிழால் உலகை தன் கைக்குள் அடக்கியவன் தமிழன். உலகளவில் பல துறைகளில் முன்னோடியான தமிழினத்தின் பல அடையாளங்கள் இன்றளவும் உலகுக்கு உணர்த்தி வருகிறது. ஆனால் தமிழன் மட்டும் தன் துறை ரீதியாக சாதனைகள் புரிந்தாலும் அடையாளம் இன்றி தவிக்கிறான். இதனால் பல துறைகளை தேர்ந்தெடுத்து நம் அடையாளங்களை பாதுகாப்பதற்காக உழைப்பவர்களை தமிழுக்கும் தமிழருக்கும் சிறப்பு சேர்ப்பவர்களையும் அடையாளம் கண்டு பாராட்டி சிறப்பிக்க வேண்டியது நமது கடமை.
இந்த முக்கியமான பணியைச் செய்ய அஞ்சல் டுடே காலை நாளிதழ் போர்முனை மாத இதழ் இணைந்து உலக அளவில் உள்ள சிறப்பு வாய்ந்த தமிழர்களை தேர்ந்தெடுத்து தன்னிகரற்ற தமிழன் என விருது (Thanigaratra Tamilan Awards) வழங்கி வருகிறது.
இந்த முயற்சி இதுவரை யாரும் செய்யாத வண்ணம் கூலி தொழிலாளி முதல் கல்வி மருத்துவம் கலை உள்ளிட்ட பல துறைகளில் சாதித்த தக்க தகுதியுடையவர்கள் தேர்வு செய்து அவர்களை பிரம்மாண்ட மேடை களில் அலங்கரித்து தன்னிகரற்ற தமிழனாக உலகுக்கு அடையாளம் படுத்துகிறோம்.